Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன்; இலோன் மஸ்க்...!


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகன் என்று டெஸ்லா தலைவர் இலோன் மஸ்க் கூறியுள்ளார்.

நியூயோர்க்கிற்கு 4 நாள் பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.

பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்திலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்.

நரேந்திர மோடி கடந்த புதன்கிழமை (14) டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவரான இலோன் மஸ்க்கை சந்தித்தார்.

மோடியுடனான சந்திப்பிற்கு பின் பேசிய இலோன் மஸ்க், "நான் மோடியின் ரசிகன். இந்தியா மீது மோடி மிகவும் அக்கறைக்காட்டுகிறார். ஏனென்றால் இந்தியாவில் முதலீடு செய்யும் படி மோடி எங்களை வலியுறுத்தியுள்ளார். இந்திய சந்தைக்குள் டெஸ்லா கார்கள் கூடிய விரைவில் நுழையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.

Post a Comment

0 Comments