Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

யாழ். தென்மராட்சியில் கிளைமோர் குண்டுகள் மீட்பு


இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் - பன்றித்தலைச்சி அம்மன் கோயிலுக்கும் பொருளாதார மத்திய நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியில் இருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் உள்ள வயல் பகுதியில் இருந்தே இரண்டு கிளைமோர் குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பழைய இரும்பு சேகரிக்கும் வியாபாரி ஒருவர் இதனைக் கண்டு வழங்கிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதையடுத்து அந்தக் கிளைமோர் குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment

0 Comments