Trending

6/recent/ticker-posts

தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் - அப்பாஸ்...!



காஸா பகுதியில் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ஆபத்தான முறையில் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் பலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தாக்குதல்களினால் இருப்பிடங்களை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பலஸ்தீன ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாடு அரசியல் தீர்வு மட்டுமே உள்ளது என்றும், ஜெருசலமை தலைநகராக கொண்டு பலஸ்தீனியர்களுக்கென தனி நாடு அமைக்கப்பட வேண்டும் என்றும் பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் மீண்டும் ஐநா பொதுச்செயலாளரிடம் விளக்கமளித்துள்ளார்.

Post a Comment

0 Comments