
தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழுக்களில் சிங்கள மொழியில் மாத்திரமே கற்பிக்கப்படுவதால் தமிழ் மொழிமூல மாணவர்கள் அவற்றிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு, பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, தேசிய பயிற்சி மற்றும் தொழில்துறை பயிற்சி ஆணைக்குழுக்களுக்கு அடுத்த வருடம் முதல் தமிழ்மொழி மூலமான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.



0 Comments