மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் மௌலானா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அஹமட் செய்னுலாப்தீன் நசீரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகியமை காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக இலக்கம் 12 மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான ஒன்பதாவது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராக அலிஸாஹிர் மௌலானா செய்யடர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments