சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள் உயிரிழந்ததாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள் அனைவரும் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் என்று ஒரு ஆசிரியர் கூறியுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, சீனாவின் சிசிடிவி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய தீ, நள்ளிரவுக்கு முன்பு அணைக்கப்பட்டதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments