Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



“மீண்டும் பள்ளிக்கு போகலாம் “குருநாகல் ஹிந்து தமிழ் வித்தியாலயத்தில் நாளை பிரம்மாண்ட நிகழ்வு...!



1969 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட குருநாகல் இந்து தமிழ் மகா வித்தியாலயம் குருநாகல் வாழ் தமிழ் பேசும் மக்களின் ஆணிவேராக காணப்படுகிறது .

இந்து தமிழ் வித்தியாலயமானது;

கல்வி ஒழுக்கம் பண்பு மற்றும் சமூக சேவையில் மாணவர்களை உருவாக்கும் பணியை 55 ஆண்டுகள் கடந்து மேற்கொண்டு வருகிறது.

இப்பாடசாலையில் பொண்ணான ஒரு நாளாக 2025.06.01 திகதி மீண்டும் பள்ளிக்குப் போகலாம் எனும் தொணிப் பொருளில் பழைய மாணவர்களின் மாபெறும் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் பாடசாலையின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும்

அதிபர்கள், ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளும், பழைய மாணவர்களின் விசேட நிகழ்வுகளும் கோளாகளமாக நடைபெற உள்ளது.

சுடர்விட்டு பிரகாசிக்கும் முத்துக்கள் ஒன்றுகூடும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஸ்டார் வானொலி சார்பாக நாங்களும் வாழ்த்துகின்றோம்.

ஏ.எம்.ஜெசீம்-

Post a Comment

0 Comments