Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

“மில்கோவை வாங்குவது குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமுல் தயார்”



மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) இந்தியாவின் அமுல் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்வதில் வெளிப்படைத்தன்மையை மீளப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக நிறுவனம் தனது கேள்விக்கு பதிலளித்ததாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இதுபற்றி தானும் தனது குழுவினரும் கேட்டதாகவும், இங்கு வெளிப்படைத்தன்மை இல்லாததை சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

“ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய நாங்களும் குறிப்பாக அமுல் நிறுவனத்தை சந்தித்தோம். இலங்கையின் NLDB நிறுவனம் மற்றும் மில்கோவை அமுல் வாங்குவது தொடர்பில் கலந்துரையாடினோம்.

வெளிப்படைத் தன்மை இல்லாததையும் அதில் எங்களின் செல்வாக்கையும் அவர்களுக்கு விளக்கினோம். அதேபோன்று இங்கு எதுவுமே பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பதையும் ஜனாதிபதி தனது சொந்த சொத்தாக இதனை விற்பனை செய்வதில் தலையிட்டமைக்கு எமது எதிர்ப்பையும் நாம் காட்டினோம்.

மேலும் இது குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இங்குள்ள வெளிப்படைத்தன்மையை ஆராய்வோம் என்றும் கூறினார்கள்..”

Post a Comment

0 Comments