Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



சர்வதேச நாணய நிதியத்தின் விசேட கலந்துரையாடல் இன்று...!



சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இந்நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்த சிறிவர்தன பங்கேற்க உள்ளார்.



இதேவேளை, இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் இதில் கலந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் கலந்துரையாடல்களில் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சித்தாந்தங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு தாம் கோரவில்லை, கடன் வழங்கியவர்களுடன் கலந்துரையாடுமாறு கோரவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments