பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) அலரி மாளிகையில் நடைபெற்றது.
இங்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துறைகளில் விரிவாக்கம் மற்றும் வர்த்தக முதலீடுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
CASMCE சங்கத்தின் தலைவர் Ren Xinglei, பிரதமரின் சீன விஜயம் குறித்து சீன மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த விஜயத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
CASMCE சங்கத்தின் துணைத் தலைவர் Xu Xiang, இந்நாட்டில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் உயிரி எரிசக்தி தொடர்பான தொழில்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
சீனாவுக்கு உயர்தர இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இலத்திரனியல் வாகனங்கள் இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்குவதற்கான சாத்தியம் குறித்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் குணவர்தன, பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க மற்றும் சீன சிறு மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் கைத்தொழில் அமைச்சின் இலங்கை முதலீட்டு சபையின் அதிகாரிகள் குழுவினர் உட்பட சீன வர்த்தகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
0 Comments