Trending

6/recent/ticker-posts

Live Radio

சிங்கள பாடலை காப்பி அடித்த அனிருத்? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...!


இசையமைப்பாளர் அனிருத் தமிழில் பல பிரம்மாண்ட படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் கூலி, முருகதாஸின் SK23 உள்ளிட்ட பல படங்களுக்கு தற்போது அவர் இசையமைத்து வருகிறார்.

அதே நேரத்தில் ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். தற்போது ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து உள்ளார். ஜான்வி கபூர் தான் அதில் ஹீரோயினாக நடிக்கிறார்.

காப்பி அடித்த அனிருத்?

தற்போது தேவரா படத்தின் இரண்டாம் சிங்கிள் Chuttamalle பாடல் வெளியாகி இருக்கிறது. அதில் ஜான்வி கபூர் உச்சகட்ட கவர்ச்சியாக தோன்றி இருப்பதால் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதே நேரத்தில் பாடலை கேட்ட நெட்டிசன்கள் அனிருத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். Manike Mage Hithe என்ற சிங்கள பாடல் இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரிய ஹிட் ஆனது. அதே டியூனை அனிருத் காப்பி அடித்திருக்கிறார் என நெட்டிசன்கள் தற்போது விளாசி வருகின்றனர்.

Post a Comment

0 Comments