Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பேஸ்புக் கணக்கை தொடங்க மார்க் ஜூக்கர்பெர்க் பயன்படுத்திய ஈ-மெயில்...!


மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பேஸ்புக்கில் தனது முதல் கணக்கை உருவாக்க பயன்படுத்திய ஈ -மெயில் ஐடியை பகிர்ந்துள்ளார்.

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் த்ரெட்களில் தீவிரமாக இடுகையிட்டு வருகிறார். மேலும் அவர் மற்றவர்களின் இடுகைக்கும் பதிலளித்து வருகிறார். அந்த வகையில், அவர் ஒரு பயனரின் வேடிக்கையான இடுகைக்கு பதிலளித்தார். தொடர்ந்து, பேஸ்புக்கில் தனது முதல் கணக்கை உருவாக்க அவர் பயன்படுத்திய ஈ – மெயில் ஐடியை வெளிப்படுத்தினார்.

இது அனைத்தும் ஒரு பயனரின் இடுகையுடன் தொடங்கியது. “நான் edu என்ற மின்னஞ்சல் முகவரியை வைத்திருக்கும் அளவுக்கு பழமையானவர்” என பதிவிட்டார். இதற்கு பதிலளித்த ஜுக்கர்பெர்க், “உண்மையானவர்களுக்கு தெரியும். முதல் கணக்கு mzuckerb@fas.harvard.edu.” என்றார்.

பேஸ்புக்கில் மார்க் ஜுக்கர்பெர்க்கின் ஐடி முதலில் உருவாக்கப்படவில்லை. ஜுக்கர்பெர்க்கிற்கு முன் மூன்று ஐடிகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் சோதனைக்காக உருவாக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டன. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தாலும், பேஸ்புக் இணை நிறுவனர்களான கிறிஸ் ஹியூஸ் மற்றும் டஸ்டின் மாஸ்கோவிட்ஸ் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

Post a Comment

0 Comments