Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

UAE Update: பொது மன்னிப்பு பெற விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி..!


ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 1 முதல் பொது மன்னிப்பு அமலுக்கு வரும் பட்சத்தில் பொது மன்னிப்பிற்கு விண்ணப்பித்து ரெசிடென்ஸ் பெர்மிட் அல்லது டிராவல் பெர்மிட் எனும் பயண அனுமதி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக அமீரகத்தின், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP) இணையதளம் மற்றும் ஸ்மார்ட் சேனல்கள் மூலம் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்யலாம் என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments