நைஜீரியா நாட்டில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 64 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு நைஜீரியாவில் ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல வேண்டும். அந்த வகையில் 70 பேர் படகில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments