கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் நேற்றிரவு முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசியல் பிரபுக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றமையே இதற்கு காரணமாகும்.
இதற்கமைய முன்னாள் அமைச்சர் சுசந்த புன்ச்சிநிலமே இந்தியாவின் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தாய்லாந்து நோக்கி பயணித்துள்ளதுடன்.
இத்தே கந்தே சத்தாதிஸ்ஸ தேரரும் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கன்றன. இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பாரியார் லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தையான திலகசிறி வீரசிங்க ஆகியோர் இன்று அதிகாலை 3 மணியளவில் டுபாய் நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments