2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளைப் பதிவு செய்த பின்னர் அனைத்து வாக்காளர்களையும் வீட்டிலேயே இருக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று, குழுக்களாக ஒன்றுகூடி தேர்தல் முடிவுகளைப் பார்ப்பதுடன், அவ்வாறான செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதைத் தவிர்க்குமாறும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வாக்காளர்கள் தமது வாக்குகளை எவ்வாறு சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் அவர் மேலும் விளக்கமளித்தார்.
0 Comments