அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியிலேயே குறிப்பிட்டுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்களின் முயற்சிக்காக இந்த மைல்கல் சாதனை கிடைத்துள்ளது.
குறித்த விடயம் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும், இந்த மசோதாவானது இறுதி அங்கீரத்துக்காக நாடாளுமன்றத்திற்கு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments