Trending

6/recent/ticker-posts

மெட்டா நிறுவனம் செலவுகளை குறைக்கும் நோக்கில் அதிரடி முடிவு…!


தனது 3 ஆவது ஆண்டாக மெட்டா நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

செலவுகளைக் குறைக்கும் நோக்கில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் சில ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்யவுள்ளது.

மெட்டா நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு 11,000 பேரும் கடந்த ஆண்டு 10,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டில் பணிநீக்கம் செய்யப்படவுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments