தாக்குதலுக்கு இலக்கானவர் யாழ் கஸ்தூரியார் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பின்னால் பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரை வழி மறித்து, ஏன் தாங்கள் முந்தி செல்வதற்கு வழி விடவில்லை என கேட்டு, தலைக்கவசத்தால் மிக மோசமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் தொடர்பிலான வீடியோ காட்சிகள் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராக்களில் பதிவாகியுள்ளது.
அதன் அடிப்படையில் பொலிஸார் அவர்களை இனங் கண்டு அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இருப்பினும் அவர்கள் இருவரும் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்றையதினம் (14) யாழ்ப்பாண பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.
ஓட்டுமடம் மற்றும் தாவடி பகுதியை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 Comments