Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம்...!


இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை நெருங்கும்.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீட்டர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதன்காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் அலைகள் நிலத்தை வந்தடையும் வாய்ப்பும் உள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments