Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி…!


மாத்தளை வில்கமுவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

வில்கமுவ - பெரகனத்த பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.

உயிரிழந்த சிறுவனின் பெற்றோர், வீடு மற்றும் தோட்டத்தை யானைகளிடமிருந்து பாதுகாக்க மின்சார வேலியை அமைத்து மாலை 6.00 மணிக்கு மின்சாரம் வழங்கி மறுநாள் காலை 6.00 மணிக்கு மின்சாரத்தைத் துண்டிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

எனினும், சம்பவத்தன்று மின்சாரத்தைத் துண்டிக்க அவர்கள் மறந்த நிலையில், வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், குறித்த வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை வில்கமுவ பொலிசர் மெட்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments