உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடுத்துள்ள போர் மிக விரைவில் முடிவுக்கு வருவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முதல் முறையாக தெரிவித்துள்ளார்.
உறுதி செய்யப்படவில்லை
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவாகியுள்ள நிலையில், அவரது அழுத்தத்தின் காரணமாக போர் முடிவுக்கு வருவதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், போர் மிக விரைவில் முடிவுக்கு வருகிறது. ஆனால் அது எப்போது என்பது உறுதி செய்யப்படவில்லை.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தெரிவாகியுள்ள நிலையில், அவர் முன்னெடுக்கும் அணியின் கொள்கை அடிப்படையில், போர் மிக விரைவில் முடிவுக்கு வருகிறது என்றார்.
மேலும், உண்மையான அமைதி உக்ரைன் மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று தேர்தல் பரப்புரையின் போது டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார்.
தமக்கு வெறும் 24 மணி நேரம் போதும், உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர என பலமுறை அவர் தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்டிருந்தார். தற்போது ஜெலென்ஸ்கியும் போர் முடிவுக்கு வருகிறது, மிக விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
அணு குண்டு தயாரிக்கும்
மட்டுமின்றி, உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்ப் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தங்களின் அடுத்த நகர்வு இருக்கும் என்றும் உக்ரைன் சூசகமாக தெரிவித்திருந்தது. இதனால், ட்ரம்ப் ஆயுதம் வழங்க மறுத்தால், அல்லது தங்களுக்கு ஆதரவளிக்க மறுத்தால், ரஷ்யாவில் அணு குண்டு வீசும் முடிவுக்கும் உக்ரைன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணு குண்டின் பத்தில் ஒருபங்கு வலுவான அணு குண்டு ஒன்றை தயாரிக்கும் நடவடிக்கைகளையும் உக்ரைன் முன்னெடுக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால், உக்ரைனுக்கு பில்லியன் கணக்கிலான ஆயுதம் மற்றும் நிதியை வழங்குவதை விட, போரை முடிவுக்கு கொண்டுவருவதே புத்திசாலித்தனம் என டொனால்டு ட்ரம்ப் கருதுவதாக கூறப்படுகிறது.
இதன் பொருட்டே, உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டுவர அவர் விரும்புவதாக கூறுகின்றனர்.
0 Comments