Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அண்ணா பல்கலைக்கழகம் முன்பு அதிமுகவினர் போராட்டம்...!



அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து, பல்கலைக்கழக நுழைவுவாயிலில் அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், எஃப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர்கள் என புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனிடையே திமுகவுக்கும், ஞானசேகருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து, பல்கலைக்கழக நுழைவுவாயிலில் அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.கவினர் - போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.கவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அதிமுகவினர் சைதாப்பேட்டை சமூக நலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments