Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஏரி உடைந்து சாலையில் நின்றிருந்த வாகனங்கள் அடித்து சென்ற காட்சி...!



கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஏரி உடைந்து சாலையில் நின்று இருந்த வாகனங்கள் அடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தரங்கரையில் ஒரே நாளில் 24 செண்டி மீட்டர் மழை பெய்துள்ள நிலையில், நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஏரி உடைந்து சாலையில் நின்று இருந்த வாகனங்கள் அடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரையில் இருந்து திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments