Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இலங்கைக்கு பிரச்சினைன்னு வந்தால் காப்பாற்ற ரணில் தயார்...!?



அனுபவமற்றவர்களிடம் நாட்டைக் கையளிக்கும் மக்கள் தீர்மானத்தினால் தாங்கள் தற்போது பாரிய அவலங்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் எதிர்கொள்ள முடியாத அரிசிப் பிரச்சினை, தேங்காய்ப் பிரச்சினை என்பன ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது இருந்திருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அப்போது அரிசி பிரச்சினை இல்லை என்றும் இருபது இலவச அரிசி விநியோகிக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டால், பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உதவத் தயார் என்றும் தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments