Trending

6/recent/ticker-posts

Live Radio

சுதந்திர தின விழாவை பொதுமக்கள் பார்வையிட அனுமதி...!



இலங்கையின் 77 வது சுதந்திர தின விழாவை பொது மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன இன்று தெரிவித்தார்.

இதனை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க அதிக வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, யாருக்காக சுதந்திர தின விழா நடத்தப்பட்டது என்ற கேள்வி எழுந்தது.இம்முறை, அதிக மக்கள் பங்களிப்புடன், மக்கள் சுதந்திர தின விழாவாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது, என அவர் கூறினார்.

Post a Comment

0 Comments