Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட மாணவி : கட்டுநாயக்கவில் அதிரடியாக கைதான ஆசிரியை

 வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஆசிரியை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயது மாணவி ஒருவரை தகாத முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் மேற்படி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபரான ஆசிரியையை மொரட்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (18) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நிமாலி மந்திரிநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

மொரட்டுவ (Moratuwa) கல்தமுல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

கல்தமுல்லவில் உள்ள தனது வீட்டில் மேலதிக வகுப்பு நடத்துவதாக பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்துள்ளார்.  

தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட மாணவி : கட்டுநாயக்கவில் அதிரடியாக கைதான ஆசிரியை | Teacher Arrested At Katunayake Airport

இதன்போது தகாத காணொளிகளை காண்பித்து குறித்த மாணவியை தகாதமுறைக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோருடன் சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனடிப்படையில், ஆசிரியை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments