Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மூன்று வாரங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு...!



இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 3,649 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 02 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 1,576 ஆகும்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 491 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 558 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 95 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இந்நிலையில், 22 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments