Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஐக்கிய தேசியக் கட்சியுடனான முதல் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிப்பு…!



ஐக்கிய தேசியக் கட்சியுடனான முதல் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருந்ததாகவும், அதன்படி, இரு கட்சிகளையும் இணைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இரு கட்சிகளையும் எவ்வாறு இணைப்பது மற்றும் எதிர்கால பணிகள் குறித்து இந்த வாரம் மேலும் விவாதங்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடல்களில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, ருவன் விஜேவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர்களான ரஞ்சித் மத்துமபண்டார, திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments