Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மாமனார் - மருமகன் இடையே கைகலப்பில் - மாமனார் ஸ்தலத்தில் உயிரிழப்பு – சம்மாந்துறையில் சம்பவம்...!



மாமனார் மருமகன் இடையே கைகலப்பு இடம்பெற்ற போது மாமனார் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (29.01.2025) புதன்கிழமை இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னம்பிள்ளை கிராமம் பகுதியில் நேற்று (29) புதன்கிழமை இரவு வேளையில் மாமனார் மருமகன் இடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் மாமனார் மருமகன் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் சம்மாந்துறை தென்னம்பிள்ளை கிராமத்தில் அமைந்துள்ள மகளின் வாடகை வீட்டு முற்றத்திலேயே இடம்பெற்றுள்ளது.

இதன் போது, மத்திய வீதி, மலையடிக்கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே மரணமடைந்துள்ளார்.

மாமனார் மருமகன் இடையே நடைபெற்ற கைகலப்பின் போது தாக்கப்பட்டு மரணமடைந்தாரா / மாரடைப்பு காரணமாக மரணமடைந்தாரா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை, சம்பவத்தில் சந்தேக நபரான ஆலிம் சேனை 02, மூதூர் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மருமகனை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைகலப்பில் மரணமடைந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி.!
madawalaenews

Post a Comment

0 Comments