
சவூதி அரேபியாவையும் பஹ்ரைன் தீவு நாட்டையும் இணைக்கும் மிக முக்கியமான கிங் ஃபஹ்ஹத் பாலம் ஈரானியத் தாக்குதல் அச்சுறுத்தலினால் இன்று (ஏப் 07) அதிகாலை முதல் மூடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" வாகனப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிங் ஃபஹ்ஹத் பால அதிகாரசபை அறிவித்துள்ளது.
25 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தப் பாலமே, அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைனை ஏனைய அரபு நாடுகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப் பாதையாகும்.
இந்தப் பாலத்திற்கு எதிராக நேரடி மிரட்டல்கள் விடுக்கப்படாத போதிலும், ஈரானின் சில தீவிரவாதக் குழுக்கள் இதனை ஒரு சாத்தியமான இலக்காக அடையாளம் கண்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானில் உள்ள பாலங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளைத் தாக்கப்போவதாக விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் இந்தப் பாலத்தைத் தாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.



0 Comments