Trending

6/recent/ticker-posts

கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது...!

 


கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.



கடந்த 19ஆம் திகதி புதுகடை  நீதவான் நீதிமன்றில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.



கொலைச் சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்தமை மற்றும் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் நீர்கொழும்பு கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த பின்புர தேவகே சமிது திவங்க வீரசிங்க (23) மற்றும் அதே முகவரியைச் சேர்ந்த சேசத்புர தேவகே சமந்தி (48) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இவர்கள் இருவரும் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் இளைய சகோதரர் எனத் தெரியவந்துள்ளது.




இதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பில் இதுவரை 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments