Trending

6/recent/ticker-posts

பொலிஸாரை ஏமாற்றும் செவ்வந்தியை பிடிக்க ஒரு மில்லியன் ரூபா பணம்...!

 


பாதாள உலகக் குற்றவாளியான கனேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த உதவிய இஷார செவ்வந்தியை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க பதில் பொலிஸ் மா அதிபர் புத்திக மனதுங்க முடிவு செய்துள்ளார்.

சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தப்பிச் செல்வதைத் தடுக்க பொலிஸ் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

பொலிஸ் குழுக்கள்

தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டும், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தியும் கடல் வழிகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் புத்திக மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் குழுக்கள் செவ்வந்தியை தேடி வருகிறது. எனினும் இதுவரை பொலிஸாரின் கண்ணில் படாமல் தப்பி வருகிறார்.


சமகாலத்தில் பொலிஸாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படும் பெண்ணாக மாறியுள்ள செவ்வந்தியை பிடிக்க மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது



Post a Comment

0 Comments