Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதத்தை தேடி அகழ்வு நடவடிக்கை

 திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியொன்றில்  விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதத்தை தேடி அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அகழ்வு நடவடிக்கையானது ஈச்சிலம்பற்று - இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் உள்ள வீடொன்றின் காணியொன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்குறித்த பகுதியில் விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து இன்று (14) காலை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் பெக்கோ இயந்திரம் மூலம் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் நீதீமன்றத்தின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து எந்தவித தடைய பொருட்களும் மீட்கப்படவில்லை.

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள்! களத்தில் அதிரடிப்படையினர் | Search For Weapons Buried By Ltte In Trinco

இதனையடுத்து மூதூர் நீதிமன்ற நீதிபதி அகழ்வினை இடைநிறுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு வழங்கியதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டது.

குறித்த இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர், தடையில் பிரிவு பொலிஸார், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments