Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பேரளிவின் விளிம்பில் மனித குலம்! சுனாமி பேரழிவு மீண்டும்!

 

சில நாட்களுக்கு முன்பு தான் பேரழிவின் சின்னமான டூம்ஸ்டே மீன் தமிழக மீனவர்கள் வசம் சிக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது மீண்டும் அதே மீன் தானாகவே கரை ஒதுங்கியுள்ளது. இந்த முறை ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியாவில் உள்ள ஸ்ட்ராஹான் அருகே ஓஷன் கடற்கரையில் தான் இந்த டூம்ஸ்டே மீன் கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கடலில் வசிக்கும் நீளமான மீன் இனங்களில் ஒன்றான இதன் அறிவியல் பெயர் ஓர்ஃபிஷ் (Oarfish) என்பதாகும். மிகவும் அரிதான இந்த மீன் ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கியுள்ளது. மூன்று மீட்டர் நீளமுள்ள இந்த மீனை 'அழிவின் தூதுவன்' எனக் குறிப்பிடுகிறார்கள். சிபில் ராபர்ட்சன் என்ற உள்ளூர்வாசி கடற்கரையில் நடந்து சென்றபோது இந்த மீனை இருப்பதைக் கண்டுபிடித்தார்.

டூம்ஸ்டே மீன் என்றால் என்ன இந்த டூம்ஸ்டே மீன் எப்போதும் ஆழ்கடலில் வசிக்கக்கூடியது. இதை "ஹெர்ரிங் மீன்களின் ராஜா" என்றும் அழைப்பார்கள். அதேநேரம் பல சமூகங்களில் இதை ஆபத்தின் அறிகுறியாகவும் பார்க்கிறார்கள். இது எட்டு மீட்டர் வரை வளரக்கூடியது. 400 கிலோவுக்கு மேல் எடை கொண்டதாக இருக்கும். டூம்ஸ்டே மீன் பொதுவாக 150 முதல் 500 மீட்டர் ஆழத்தில் வாழும். எனவே, அதைக் காண்பது அல்லது பிடிப்பது மிகவும் அரிது. இதனால் இந்த மீன் திடீரென கரையொதுங்கிருப்பது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருவதாகவே இருக்கிறது.

வல்லுநர்கள் சொல்வது என்ன

இது தொடர்பாக டாஸ்மேனியா பல்கலைக்கழக வல்லுநர் நெவில் பாரெட் கூறுகையில், "இப்படி ஒரு மீனைப் பார்ப்பது மிகவும் அசாதாரணமானது. நாம் இந்த வகை மீன் குறித்து ஆய்வுகளை நடத்துவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த மீன் இருக்கும் பகுதியில் நாம் மீன் பிடிப்பதைக் கூடச் செய்வதில்லை. அப்படியிருக்கும்போது திடீரென அவை கரையொதுங்கியுள்ளது ஆச்சரியமாகவே இருக்கிறது" என்றார். இந்த டூம்ஸ்டே மீன் மெதுவாக நீந்தக்கூடியது.. அவை பொதுவாகத் தண்ணீரில் மெதுவாக, செங்குத்தான நிலையில் மிதந்து, கடலில் உள்ள மிதவை உயிரினங்களை உண்டு வாழும்.

கடலில் வசிக்கும் நீளமான மீன் இனங்களில் ஒன்றான இதன் அறிவியல் பெயர் ஓர்ஃபிஷ் (Oarfish) என்பதாகும். மிகவும் அரிதான இந்த மீன் ஆஸ்திரேலியாவில் கரையொதுங்கியுள்ளது. மூன்று மீட்டர் நீளமுள்ள இந்த மீனை 'அழிவின் தூதுவன்' எனக் குறிப்பிடுகிறார்கள். சிபில் ராபர்ட்சன் என்ற உள்ளூர்வாசி கடற்கரையில் நடந்து சென்றபோது இந்த மீனை இருப்பதைக் கண்டுபிடித்தார்.

இந்த மீனைப் பார்த்தவுடனே அவர் ஒரு நொடி நடுங்கிப் போய்விட்டாராம். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மூன்று மீட்டருக்கு மேல் நீளமுள்ளதாக அந்த மீன் இருந்தது. அது மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. உண்மையில் அதைப் பார்த்த போது கொஞ்சம் பயமாகவே இருந்தது. முதலில் அது என்ன மீன் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும், வித்தியாசமாக இருப்பதால் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்தேன். அதன் பிறகு கமெண்ட்டுகளில் அது என்ன மீன் என்பது தெரிய வந்தது" என்றார்.

இதை அவர் தனது ரெட்டிட் தளத்தில் பகிர்ந்த நிலையில், அது உடனடியாக டிரெண்டானது. அழிவு நெருங்குவதையே இது காட்டுவதாக நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மனிதக்குலம் கடலை அலட்சியமாக நடத்துவதால் கடல் மிகவும் அதிருப்தியில் உள்ளது. அதையே இது காட்டுகிறது" எனப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் உலகம் மெல்ல அழிந்து கொண்டிருப்பது போல் தோன்றுவதாகப் பதிவிட்டுள்ளார்.

பேரழிவின் தூதுவர்கள்

மற்றொரு நெட்டிசன், "அவை பேரழிவின் தூதுவர்கள்.. கடலுக்கு அடியில் ஏற்படும் கொந்தளிப்புகளால் மட்டுமே இவ்வளவு ஆழத்தில் இருக்கும் ஒரு உயிரினம் மேற்பரப்பிற்கு வர முடியும். சுனாமியின் அறிகுறியாகக் கூட இது இருக்கலாம்" எனப் பதிவிட்டுள்ளார்






Post a Comment

0 Comments