Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக 729 புதிய வீடுகள்...!


தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, ஐந்து மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் புதிதாகக் கட்டப்பட்ட 729 வீடுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07) திறந்து வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில், தமிழக மாநில செயலகத்திலிருந்து காணொளி மூலமாக இந்த திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.

38.76 கோடி இந்திய ரூபா செலவில் கட்டப்பட்ட இந்த வீடுகள் விழுப்புரம், திருப்பூர், சேலம், தர்மபுரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் அமைந்துள்ளன.

இந்த வீடுகள், மாநிலம் முழுவதும் பரவியுள்ள இலங்கைத் தமிழ் முகாம்களில் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2021 ஆகஸ்ட் மாதம் மாநில சட்டமன்றத்தில் விதி 110 இன் கீழ் அறிவிக்கப்பட்ட தமிழக அரசின் பரந்த மறுவாழ்வு முயற்சியின் ஒரு பகுதியாகும்.

அரசாங்கத்தின் நீண்டகால திட்டத்தின்படி, 35 மறுவாழ்வு முகாம்களில் மொத்தம் 180.34 கோடி இந்திய ரூபா மதிப்பீட்டில் 3,510 வீடுகள் கட்டப்பட உள்ளன.

இதில், 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் 2,781 வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த முகாம்களில் உள்கட்டமைப்பு மேம்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

இதில் புதிய உள் வீதிகள், மேம்படுத்தப்பட்ட மின்சார இணைப்பு வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் விநியோக வசதிகள் ஆகியவை அடங்கும்.

தமிழ்நாட்டின் 26 மாவட்டங்களில் உள்ள 67 அரசு முகாம்களில் பல தசாப்தங்களாகத் தங்கள் தாயகத்தில் இன மோதலில் இருந்து தப்பி ஓடிய இலங்கைத் தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதற்கான திமுக அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த மறுவாழ்வுத் திட்டம் இருப்பதாக அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments