Trending

6/recent/ticker-posts

Live Radio

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி...!



அம்பாறை, உஹன – கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கலஹிடியாகொட கிராமத்தைச் சேர்ந்த கெலும் நமல் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து, உஹன பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் இணைத்த ஒருவரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில் உஹன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments