Trending

6/recent/ticker-posts

Live Radio

உலகளாவிய கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கை 94 வது இடத்தைப் பிடித்துள்ளது...!



உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலை வெளியிடும் 2026 ஆம் ஆண்டுக்கான 'ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 94ஆவது இடத்திற்கு முன்னேறி, அண்மைய ஆண்டுகளில் தனது மிகச்சிறந்த நிலையை எட்டியுள்ளது.

கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் 96 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை 2 இடங்கள் முன்னேறி 94 ஆவது இடத்தை அடைந்துள்ளது.

முன்னர் வீசா இன்றி பயணிக்கக்கூடிய இடங்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் இப்பட்டியலில் இலங்கை படிப்படியாக முன்னேறி வருகிறது.

இப்பட்டியலானது சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் 199 கடவுச்சீட்டுகள் மற்றும் 227 பயண இடங்களை உள்ளடக்கி உருவாக்கப்படுகிறது.

சிங்கப்பூர் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. (192 நாடுகளுக்கு முன்வீசா இன்றிப் பயணிக்கலாம்).

ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் 2ஆம் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

Post a Comment

0 Comments