Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இலங்கை போன்ற வளரும் நாடுகளுக்கு வரியின்றி பொருட்களை ஏற்றுமதி செய்ய பிரித்தானியா புதிய வாய்ப்பு...!



இலங்கை போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியை எளிதாக்குவதற்காக, பிரித்தானியாவின் வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தால் புதிய வர்த்தக தொகுப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஊடாக இலங்கை, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களை தீர்வை வரியின் இறக்குமதி செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படும்.

அவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தக யோசனை, இந்த புதிய முறைமைக்கான புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, பிரித்தானிய வணிகங்கள் மற்றும் நுகர்வோர் அதிக போட்டி விலையில் இறக்குமதிகளிலிருந்து பயனடைய முடியும் என்று பிரித்தானிய வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments