
பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஜோர்ஜியானா ரோட்டரிக்கியூஸை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
இந்த ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட மோதிரத்தை சமூகதளத்தில் வெளியிட்டுள்ளனர். மெட்ரிட்டில் ரோட்டரிக்கியூஸ் வேலை பார்த்த கடை ஒன்றில் இருவரும் சந்தித்த பின்னர் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
போர்த்துக்கல் மற்றும் அல் நாசர் வீரரான 40 வயது ரொனால்டோவுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளதோடு அதில் இரு குழந்தைகள் ரோட்டரிக்கியூஸுக்கு பிறந்தவர்களாவர். இந்த ஜோடி தற்போது சவூதி அரேபிய தலைநகர் ரியாதில் வசித்து வருகின்றனர். அங்கு ரொனால்டோ அல் நாசர் அணிக்காக ஆடுவதோடு அவர் 2022 இல் 238 டொலர் வருடாந்த சம்பளத்திற்காக ஒப்பந்தமானார்.
இந்த ஆண்டில் அவரது ஒப்பந்தம் 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டது.
0 Comments