
தம்புள்ளை மாநகர சபைக்குட்பட்ட தம்புள்ளை சதிபொல பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று (18) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தம்புள்ளை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் காலை வேலைக்குச் சென்றபோது, தீ பரவுவதைக் கண்டு, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அறிவித்து, தீ அணைக்கப்பட்டது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், தீ விபத்து ஏற்பட்ட கடையில் தம்புள்ளை மாநகர சபை பொலித்தீன் சேமித்து வைத்திருந்ததாகவும், பொலித்தீன் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் நாசமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



0 Comments