
குருநாகல் அலகொளதெனிய அந்நூர் குர்ஆன் பயிற்சி மத்ரசா மாணவர்களின் இஸ்லாமிய கலை மற்றும்கலாசார நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மிகக் கோலா கலமாக குருநாகல் மல்லவப்பிட்டிய அல்ஹம்ரா -ஆரம்பப்பாடசாலையின் கேட்போர் கூட உள் அரங்கில் சுயாதீன தொலைக்காட்சி ITN, மற்றும் வசந்தம் தொலைக்காட்சி சேவையின் பிரபல செய்தி வாசிப்பாளரும் முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரஅமைச்சின் ஊடகச் செயலாளருமான அப்துல் மஜீட் ஜெசீம் அவர்களின் நெறிப்படுத்தலிலும் அந் நூர் குர்ஆன்பயிற்சி மத்ரசாவின் ஸ்தாபகர் பாத்திமா சவ்மினா முஅல்லிமா அவர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும்ஞாயிற்றுக் கிழமை காலை 08.30 மணிக்கு இடம்பெற உள்ளது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பிரபல மார்க்க அறிஞ்சரும் அலக்கொளதெனிய புஷ்ரா அரபுக் கலாசாலையின்அதிபருமான அஷ் -ஷேஹ், முசம்மில் (ஹாசிமி )அவர்கள் கலந்து விசேட மார்க்க சொற் பொழிவு நிகழ்த்தஉள்ளார்.
இன்நிகழ்வில் விசேட அதிதிகளாக மாஸ் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் அல்ஜாமீஉல்அக்பர் ஜும்மாஹ் பள்ளிவாசல் தலைவருமான அல்ஹாஜ் Z.M.ஹம்சா அவர்களும் ,
மல்லவப்பிட்டிய அல்ஹம்ரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் அஷ்ஷெஹ் மாஹிர் மற்றும் அல கொல தெனியஜும்மாஹ் பள்ளிவாசல் நிருவாக சபையின் தலைவர் ஜனாப் சர்தான் மற்றும் செயலாளர் ஜனாப் முகமட் நிலாம் , மல்லவப்பிட்டிய ஜாமீயுல் அக்பர் ஜும்மா பள்ளிவாசல் உப தலைவர் ஜனாப் A.R.M. பாரிஸ் ஆகியோர்கள் கலந்துசிறப்பிக்க உள்ளதுடன் உலமக்கள், ஆசிரியர்கள் கல்வியலாளர்கள் ,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
கடந்த காலங்களில் குர் ஆன் மத்ரசாவில் நடைபெற்ற இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சியில் வெற்றி ஈட்டிய மாணவமாணவிகளுக்கும் மற்றும் அல் குர்ஆன் தஜ்வீத் வகுப்பில் 3மாத கர்க்கை நெறியினை பூர்த்தி செய்தமாணவிகளுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கொளரவிக்க படவுள்ளனர்.



0 Comments