
இன்று ஆசிரியர் தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது. நேற்றைய தினம் உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு குழந்தைகளையும் நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதைப் போலவே ஆசிரியர்களுக்கும் காணப்படுகிறது. இன்னும் சொல்வதாயின் ஒரு பிள்ளை அதிகளவான நேரத்தை பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புக்களிலேயே செலவிடுகிறது இதன் போது பெற்றோரின் அரவணைப்பில் இருப்பதை விட ஆசிரியர்களின் கண்காணிப்பின் கீழ் தான் அதிகளவில் அவர்கள் வளர்கின்றனர்.
ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் ஆசிரியரின் வகிபாகம் அதிகளவில் காணப்படுகிறது. இன்று பல்வேநு துறைகளில் வளர்ச்சியடைந்து முன்னிலையில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு நல்ல ஆசிரியரின் வழிநடத்தலில் வந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இன்று ஆசிரியர் தினம் கொண்டாடும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.



0 Comments