Trending

6/recent/ticker-posts

Live Radio

சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் விபத்து – மூன்று பேர் காயம்...!



களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்ப குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது என பிரதே ஊடகங்கள் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளன.

கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த காரே குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்தில் சிக்கிக்கொண்டுள்ளது விபத்து சம்பவிக்கும்போது காரில் மூன்று பேர் பயணித்துள்ள நிலையில் காயமடைந்திருப்பதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்து , வீதியை விட்டு விலகியதால் இச் சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு கல்முனையில் வீதியின் குருக்கள்மடம் பகுதியில் அதிகளவான வளைவுகள் காணப்படுவதாகவும், மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments