
வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம் பெயர்வதற்கான தடை நீண்ட காலம் நீடிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் துப்பாக்கி சூடு நடத்தியதையடுத்து தீவிரவாதிகளின் பிடியில் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் புலம் பெயரும் திட்டத்தை நீண்டகாலத்திற்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் எல்லையை கட்டுப்பாடின்றி திறந்துவிட்டதே அமெரிக்காவின் இந்த நிலைமைக்கு காரணம் என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவின் தடைபட்டியலில் ஆப்கானிஸ்தான், சோமாலியா உள்ளிட்ட 19 நாடுகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.



0 Comments