Trending

6/recent/ticker-posts

Live Radio

கல்வி சீர்திருத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு...!


2026 ஜனவரி 13 அன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானத்திற்கு இணங்க, ஜனவரி 21 முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் தரம் 1 க்கு செயல்படுத்த முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான பாடத்திட்டத்தில் முறையான கல்வி நடவடிக்கைகள் முன்னர் அறிவுறுத்தப்பட்டபடி 2026 ஜனவரி 29 அன்று ஆரம்பமாகும்.

தரம் 6 க்காக அறிமுகப்படுத்தப்படவிருந்த புதிய பாடத்திட்டம் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் தரம் 6 முதல் தரம் 13 வரை, ஒரு நாளுக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை எட்டாக (08) திருத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடவேளையும் 40 நிமிடங்கள் கொண்டதாக அமையும்.

கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த அதே கால அட்டவணை முறைமை பின்பற்றப்பட வேண்டும்.

தரம் 6 க்காக முந்தைய ஆண்டுகளில் நடைமுறையில் இருந்த பாடத்திட்டமே இந்த ஆண்டும் தொடரும்.

கடந்த ஆண்டு மாணவர்கள் பயன்படுத்திய தரம் 6 பாடப்புத்தகங்களைச் சேகரித்து, அவற்றை புதிய மாணவர்களுக்கு விநியோகிக்குமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான அளவு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு விரைவில் விநியோகிக்கப்படும்.

தரம் 6 பாடப்புத்தகங்களின் மென்பிரதிகள் கல்வி அமைச்சின் இ-தக்சலாவ இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

புதிய சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னோடித் திட்டங்கள் சில மாகாணங்களில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான ஆசிரியர் பயிற்சிகள் 2026 ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான எண்ணக்கருப் பத்திரிகைகள், பாடத்திட்டக் கட்டமைப்பு மற்றும் ஏனைய ஆவணங்கள் பொதுமக்களின் கலந்துரையாடலுக்காகவும் கருத்துக்களுக்காகவும் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments