
நபரொருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட காவல்துறை பரிசோதகர் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மொனராகலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மொணராகலை மேல் நீதிமன்ற நீதியரசர் சிந்தக்க ஸ்ரீநாத் குணசேகரவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு குறித்த காவல்துறை அதிகாரி ஹம்பேகமுவ காவல் நிலையத்தில் பணியாற்றிய போது, நபரொருவரைத் தாக்கி காயப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அதன்படி 7 ஆண்டுகள் கடூழியச் சிறை தண்டனையுடன் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக 06 மாத கால சாதாரண சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரி தற்போது சியம்பலாண்டுவ காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments