
பெப்ரவரியில் ஆரம்பமாகும் ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இலக்குவைத்து இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் ஜனவரி 18ஆம் திகதி தொடக்கம் கடமைகளை தொடரவுள்ளார். மேலும் உலகக்கிண்ணம் நிறைவடைந்தவுடன் மார்ச் 10ஆம் திகதி வரை இவர் பணியாற்றவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
22ஆம் திகதி ஆரம்பமாகும் இங்கிலாந்து தொடரின் போது ரத்தோர் இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றுவார். உலகளாவிய போட்டிக்கு முன்னதாக இலங்கையின் துடுப்பாட்ட ஆயத்தங்களை வலுப்படுத்தவுள்ளார்.
2019 முதல் 2024 வரை இந்தியா அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக பணியாற்றிய ரத்தோர், தற்போது ராஜஸ்தான் ரோயல்ஸின் உதவி பயிற்சியாளராக உள்ளார்.



0 Comments