
குடிமக்கள் என்ற ரீதியில் அரச சேவையிலிருந்து நேர்மையான கலாசாரமும் திறமையான சேவையுமே எதிர்பார்க்கப்படுவதாகவும், ஊழலற்ற, மக்கள் நலன்சார்ந்த நிர்வாகமும் அத்தகைய கலாசாரமும் நாட்டில் உருவாக வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசாங்கம் என்ற ரீதியில் அந்தப் பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்ற நம்பிக்கையைப் மக்களுக்கு வழங்குவதற்கான ஒரு கட்டமே இந்த வேலைத்திட்டம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்படும் நேர்மையான அரச சேவைக்கான “நேர்மையான கலாசாரம் – சுத்தமான இலங்கை” (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக, ஜூலை 27ஆம் திகதி இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் “கல்வி அமைச்சின் தேசிய நேர்மை வாரம்” தொடக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



0 Comments