அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அனைத்து வகையான சளி, இருமல், காய்ச்சல் மற்றும் நுரையீரல் தொற்று பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கக்கூடிய ஒரே ஒரு 'மூக்கு வழி தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.
தடுப்பு மருந்து வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த முறையை விட இது முற்றிலும் மாறுபட்டது என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
வழக்கமான தடுப்பு மருந்துகள் ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமியை, உதாரணமாக தட்டம்மை அல்லது சின்னம்மை எதிர்த்துப் போராட உடலைப் பழக்கும்.
ஆனால் இந்த புதிய முறை மூக்கு வழியாகச் செலுத்தப்படும் போது, அது, நுரையீரலில் உள்ள 'மேக்ரோபேஜஸ்' எனப்படும் வெள்ளை இரத்த அணுக்களை தீவிர விழிப்புணர்வு நிலையில் வைக்கிறது.
இதன் மூலம், எந்த வகையான வைரஸ் அல்லது பக்டீரியா உடலுக்குள் நுழைய முயன்றாலும், இந்த கலங்கள் உடனடியாகச் செயல்பட்டு அவற்றைத் தடுக்கும்.
.jpg)



0 Comments